கோமல் சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோமல் சுவாமிநாதன் (1935 - 1995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். இவரது எழுத்தில் வந்த தண்ணீர் தண்ணீர் முக்கியமான திரைப்படம்

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை

சுவாமிநாதன் திருவாரூர் அருகே கோமல் என்ற ஊரில் 1935ல் பிறந்தார். பள்ளி படிப்புக்குப் பின்னர் 1957 ல் நாடக ஆசையால் ஊரைவிட்டு வந்து சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 அவர்களுக்காக புதியபாதை என்ற முதல் நாடகத்தை எழுதினார்.

திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் வசன உதவியாளராகப் பணியாற்றினார். திரையில் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அவரது சிலநாடகங்கள் படமானாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை.

1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடககுழு ஒன்றை அமைத்தார். அந்தக்குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப்பிரச்சினைகளையுமே அவர் எழுதினார். தீவிரமான இடதுசாரி பிடிப்புடையவராக இருந்தார்.

1980ல் இவர் எழுதிய [தண்ணீர் தண்ணீர்] என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்கு பெரும் புகழ் சேர்த்தது. அதைத்தொடர்ந்து அவரது பலநாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய படங்களை இயக்கினார்.

[தொகு] இதழியல்

வாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டார். தன் நாடகக்குழுவை கலைத்துவிட்டு இதழியலில் ஈடுபட்டார். முன்னரே அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. சி. சு. செல்லப்பாவின் நண்பராக எழுத்து இதழில் பங்கு பெற்றிருந்தார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப்பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக்கொண்டிருந்த எழுத்தாளர்களை பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது

[தொகு] கோமல் படைப்புகள்

சன்னிதி தெரு

நவாப் நாற்காலி [சி வி ராஜேந்திரனால் சினிமாவாக எடுக்கப்பட்டது]

மந்திரி குமார்

பட்டணம் பறிபோகிறது

வாழ்வின் வாசல்

பெருமாளே சாட்சி [ தமிழில் குமாரவிஜயம் என்றபேரிலும் மலையாலத்தில் பாலாழிமதனம் என்றபேரிலும் படமாகியது]

ஜீஸஸ் வருவார்

யுத்தகாண்டம் [ அதே பேரில் படமாகியது

ராஜபரம்பரை [பாலூட்டி வளர்த்தகிளி என்ற பேரில்படமாகியது]

அஞ்சுபுலி ஒரு பென்

சுல்தான் ஏகாதசி

கோடு இல்லாத கோலங்கள்

சொற்கபூமி [அனல்காற்று என்றபேரில் படமாகியது

செக்குமாடுகள் [ சாதிக்கொரு நீதி என்றபேரில்படமாகியது]

தண்ணீர் தண்ணீர் [ அதேபேரில் படமாகியது]

ஒரு இந்தியக்கனவு [அதேபேரில்படமாகியது]

அசோகவனம்

இருட்டிலே தேடாதீங்க

ந்ள்ளிரவில் பெற்றோம்

கறுப்பு வியாழக்கிழமை

கிராம ராஜ்யம்

ஆட்சி மாற்றம்

மனிதன் என்னும் தீவு

நாற்காலி

[தொகு] இணைப்புகள்

கோமல் ஈழத்து அஞ்சலி http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=6104:2011-01-27-03-44-22&catid=72:article&Itemid=100

ஆங்கில அஞ்சலிக்கட்டுரை http://www.zine5.com/interactive/index.php?name=News&file=article&sid=1315

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோமல்_சுவாமிநாதன்&oldid=863516" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி