திருவல்லிக்கேணி
| திருவல்லிக்கேணி | |
| — neighbourhood — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| வட்டம் | திருவல்லிக்கேணி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருவல்லிக்கேணி |
| Zone | மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
திருவல்லிக்கேணி (Triplicane) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்வியதேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருவல்லிக்கேணி மட்டைப்பந்து ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். எம் ஏ சிதம்பரம் மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது.
இந்தப் பகுதியில் சம அளவில் இந்துக்களும் இசுலாமியர்களும் உள்ளனர். தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன.
திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. "மான்சன்"(Mansion) என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடி சென்னை வரும் பல இளைஞர்களுக்கு திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.
திருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய தி.நகர் என்று அழைக்கப்படுகிறது, பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு.
[தொகு] புகழ்பெற்றவர்கள்
மகாகவி பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணி பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது. எழுத்தாளர் சுஜாதா, கிரிக்கெட் வீரர் எம். ஜே. கோபாலன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், டபிள்யூ. வி. ராமன் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களை உருவாக்கி இருக்கிறது. 150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலை பள்ளி இங்கு தான் உள்ளது. நோபல் பரிசு வென்ற சுப்ரமணியம் சந்திரசேகர் இப்பள்ளியில் (1922 - 1925) படித்தவர் ஆவார்.
[தொகு] நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:
-
- வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
- கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
- ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
- மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.