தென்னிந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தென் இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாசா செயற்கைக்கோள் புகைப்படம், ஜனவரி 31, 2003

தென்னிந்தியா என்பது இந்திய நாட்டின் தெற்குப் பகுதியைக் குறிக்கும். ஆட்சிப் பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய இந்திய மாநிலங்களான, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் என்பவற்றை உள்ளடக்கிய (பிரதேசமாகும்) நிலப்பகுதியாகும். இது மக்களின் அடிப்படையில், திராவிட இன மக்களே இப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் பேசும் மொழிகளும் ஒருங்கே திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன.

இது ஒரு தீபகற்பமாக (மூன்று புறம் நீரால் சூழப்பட்ட, மூவலந்தீவாக) அமைந்துள்ளது. மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும் எல்லையாக அமைந்துள்ளன. மேற்குக் கரை மலபார் கரை எனவும், மேற்குக் கரை கோரமண்டல் கரை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இத் தீபகற்பத்துக்குத் தெற்கே இலங்கைத் தீவு அமைந்துள்ளது.

வடக்கு எல்லையில் வட இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஒரிசா என்பன உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிந்தியா&oldid=1009365" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்