சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எம். ஏ. சிதம்பரம் மைதானம் | ||||
| சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | ||||
எம். ஏ. சிதம்பரம் மைதானம் |
||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | சேப்பாக்கம், சென்னை | |||
| அமைப்பு | 1916 | |||
| இருக்கைகள் | 50,000 | |||
| உரிமையாளர் | தமிழ்நாடு அரசு | |||
| குத்தகையாளர் | தமிழ்நாடு அரசு | |||
| முடிவுகளின் பெயர்கள் | அண்ணா பவிலியன் முனை வி. பட்டாபிராமன் முனை |
|||
| பன்னாட்டுத் தகவல்கள் | ||||
| முதல் தேர்வு | 10 பெப்ரவரி 1934: இந்தியா எதிர் இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 11 டிசம்பர் 2008: இந்தியா எதிர் இங்கிலாந்து | |||
| முதல் ஒரு நாள் | 9 அக்டோபர் 1987: இந்தியா எதிர் ஆஸ்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் | 10 டிசம்பர் 2010: இந்தியா எதிர் நியூசிலாந்து | |||
|
22 டிசம்பர், 2010 இன் படி |
||||
சென்னையிலுள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஏ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் தேர்வுப் போட்டி நடை பெற்றது.
இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.
1996ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.
பொருளடக்கம் |
[தொகு] சாதனைகள்
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வீரேந்தர் சேவாக் தென்னாபிரிக்காவுக்கு எதிராகப் பெற்ற 319 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் சாயிட் அன்வர் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 194 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 652/7d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 83 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி நரேந்திர ஹிர்வானி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 16/136 ஆகும்.
- ராகுல் திராவிட் தேர்வுப் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை இங்கு பூர்த்திசெய்தார்.
- சச்சின் டெண்டுல்கர் தேர்வுப் போட்டியொன்றில் நான்காவது இன்னிங்ஸில் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இங்கு இடம்பெற்றது.
[தொகு] உலகக் கிண்ணம்
[தொகு] 1987 உலகக் கிண்ணம்
| 9 அக்டோபர் 1987 துடுப்பாட்ட விபரம் |
ஆஸ்திரேலியா 270/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 269 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆத்திரேலியா 1 ஓட்டத்தினால் வெற்றி நடுவர்கள்: டேவிட் அர்ச்சர்(மே.இ) மற்றும் டிக்கி பேட்(இங்கி) ஆட்ட நாயகன்: ஜொஃப் மார்ஷ் |
| ஜொஃப் மார்ஷ் 110 (141) மனோஜ் பிரபாகர் 2/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
நவ்ஜோத் சிங் சித்து 73 (79) க்ரெய்க் மக்டெர்மொட் 4/56 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
|||
| 13 அக்டோபர் 1987 துடுப்பாட்ட விபரம் |
ஆஸ்திரேலியா 235/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 139 (42.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆத்திரேலியா 96 ஓட்டங்களால் வெற்றி நடுவர்கள்: கைசர் ஹயாட்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி) ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா |
| அலன் போடர் 67(88) கெவின் கர்ரன் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்) |
கெவின் கர்ரன் 30 (38) சைமன் ஓ'டொனல் 4/39 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|||
[தொகு] 1996 உலகக் கிண்ணம்
| 11 மார்ச் 1996 துடுப்பாட்ட விபரம் |
நியூசிலாந்து 286/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 289/4 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி (13 பந்துகள் மீதமிருக்கையில்) நடுவர்கள்: சிரில் மிச்லி(தெ.ஆ) மற்றும் சீனிவாசராகவன் வெங்கடராகவன்(இந்தி) ஆட்ட நாயகன்: மாக் வா |
| கிரிஸ் ஹரிஸ் 130 (124) கிளென் மெக்ரா 2/50 (9 பந்துப் பரிமாற்றங்கள்) |
மாக் வா 110 (112) நேதன் அஸ்டில் 1/21 (3 பந்துப் பரிமாற்றங்கள்) |
|||
[தொகு] 2011 உலகக் கிண்ணம்
| 20 பெப்ரவரி 2011 |
நியூசிலாந்து |
எதிர் | பார்வையாளர்கள்: | |
| 6 மார்ச் 2011 |
இங்கிலாந்து |
எதிர் | பார்வையாளர்கள்: | |
| 17 மார்ச் 2011 |
இங்கிலாந்து |
எதிர் | பார்வையாளர்கள்: | |
| 20 மார்ச் 2011 |
இந்தியா |
எதிர் | பார்வையாளர்கள்: | |