துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மட்டைப்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துடுப்பாட்டம்
Pollock to Hussey.jpg
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு சர்வதேச கிரிக்கட் சஙகம்
முதலில் விளையாடியது 18ஆம் நூற்றாண்டில்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
அணி உறுப்பினர்கள் இரு அணியில் 11பேர்
இருபாலரும் ஒருவருக்கான
பகுப்பு அணி, பந்தும் கிரிக்கட் மட்டையும்
விளையாட்டுக் கருவிகள் கிரிக்கட் பந்து, கிரிக்கட் மட்டை, விக்கெட்.
விளையாடுமிடம் கிரிக்கட் களம்
ஒலிம்பிக் 1900 வெப்ப காலத்தில் மட்டும்

துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, Cricket, கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது கனவான்களின் விளையாட்டு என சிறப்பித்துக் கூறப்படுகிறது.இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டு ஆகும்.

துடுப்பாட்டம் முதலாவதாக 16ஆம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்திலேயே விளையாடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இது இங்கிலாந்து முழுவதுமாக விளையாடப்படத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் துடுப்பாட்டம் சர்வதேச ரீதியாகவும் விளையாடப்படத் தொடங்கியது. துடுப்பாட்டத்தின் பிதாமகன் டொனால்ட் பிரட்மன் ஆவார். துடுப்பாட்டத்தின் புனிதபூமி என பிரட்மன் பிறந்து வளர்ந்த போவ்ரல் நகரம் அழைக்கப்படுகிறது. துடுப்பாட்டம் தொடர்பான விடயங்களைத் தரும் நூல் விஸ்டன் ஆகும். இதன் ஆட்ட விதிமுறைகள் 1774இல் உருவானது.

வரலாறு[தொகு]

விதிகளும் விளையாடுதலும்[தொகு]

ஆட்டம்[தொகு]

முதலில் மட்டை பிடிக்கும் அணியினருள் இருவர் பிட்சின் இரு முனைகளிலும் நின்று கொள்வர். பந்து வீசும் அணியினர் பந்தினை தண்டுகள் மீது அடித்து வீழ்த்த முயற்சி செய்வர். தண்டுகளின் முன் நிற்கும் மட்டை பிடிப்பவர் பந்து தண்டின் மேல் படாமல் காக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் மைதானத்தில் அடித்துவிட்டு பிட்சின் ஓரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடலாம். இவ்வாறு எத்தனை முறை மட்டை வீசும் அணியினர் ஓடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் எனப்படும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், அடிக்கப்படும் பந்து மைதான எல்லையைத் தாண்டிவிட்டால் மட்டை பிடிக்கும் அணியினருக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும். பந்து தண்டு மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து தரையில் படாமல் நேராக பந்து வீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டை பிடிப்பவர் விலகிக்கொள்ள வேண்டும். மட்டை வீசும் அணியின் அடுத்த ஆட்டக்காரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஆட்டக்காரர்களை பந்து வீசுபவர் வீழ்த்த வேண்டும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகள் உள்ளன.

ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டை பிடிக்கும். ஆட்ட இறுதியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

ஆடுகளம்[தொகு]

நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் சுமார் 20 \times 3 மீட்டர் நீள அகலத்தில் பிட்ச் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்தப் பிட்சின் இரு முனைகளில் தலா மூன்று இலக்குமுளைகள் நடப்பட்டிருக்கும்.

ஆட்ட எல்லைக் கோடு[தொகு]

ஆட்டத்திற்கான கட்டைகள்[தொகு]

துடுப்பு மட்டை மற்றும் பந்து[தொகு]

இது வில்லோ எனும் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்ட்ஸ் ஆகும்.இதை ஜோன்பால் என்பவரே முதன் முதலில் வடிவமைத்தார்.

இது அநேகமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களிலேயே காணப்படுகிறது. இவற்றின் சுற்றளவுகள் 20.79 செ.மீ தொடக்கம் 22.8 செ.மீ வரை காணப்படுகிறன. இவற்றின் எடை அண்ணளவாக 5.75 அவுன்ச் ஆகும்.

ஆட்ட நடுவர்[தொகு]

ஆட்ட வகைகள்[தொகு]

போட்டிப் பந்தயம்[தொகு]

டெஸ்ட் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும். உலகில் முதலாவது டெஸ்ட் போட்டி 1787.03.15 இல் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டிகளில் மிக இளம் வயதில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமை முகம்மது அஷ்ரப்பு என்பவரையே சாரும்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டி[தொகு]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

ஒரு நாள் போட்டிகள் 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது. முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி 1971.01.05 இல் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் இடம்பெற்றது.

இருபது 20 போட்டிகள்[தொகு]

இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்க்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விறுவிறுப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது பரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்பட்டு வருகின்றது.

பன்னாட்டுக் கட்டமைப்பு[தொகு]

அங்கத்தினர்[தொகு]

முழு அங்கத்தினர் பின்வருமாறு:

நாடு அதிகார சபை அங்கத்துவம் தற்போதைய ஐசிசி டெஸ்ட் தரம் தற்போதைய ஐசிசி ஒருநாள் தரம் தற்போதைய ஐசிசி 20இருபது தரம்
Flag of Australia.svg ஆஸ்திரேலியா அவுத்திரேலிய துடுப்பாட்டம் 15 சூலை 1909[1] 4 4 7
Flag of Bangladesh.svg வங்காளதேசம் பங்காளதேச துடுப்பாட்ட சபை 26 சூன் 2000[1] 9 9 9
Flag of England.svg இங்கிலாந்து இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட சபை 15 சூலை 1909[1] 2 2 5
Flag of India.svg இந்தியா இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டுச் சபை 31 மே 1926[1] 3 1 3
Flag of New Zealand.svg நியூசிலாந்து நியூசிலாந்து துடுப்பாட்டம் 31 மே 1926[1] 8 8 8
Flag of Pakistan.svg பாக்கித்தான் பாக்கித்தான் துடுப்பாட்ட சபை 28 சூலை 1953[1] 4 6 2
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்க துடுப்பாட்டம் 15 சூலை 1909A[1] 1 3 6
Flag of Sri Lanka.svg இலங்கை இலங்கை துடுப்பாட்டம் 21 சூலை 1981[1] 6 5 1
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்திய துடுப்பாட்ட சபை 31 மே 1926[1] 7 7 2
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே சிம்பாபே துடுப்பாட்டம் 6 சூலை 1992[1] 10 10

*Last Updated: 29-Dec-2012 | AResigned May 1961, readmitted 10 July 1991.

முதன்மை இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கத்தினர்[தொகு]

உலகில் மட்டைப்பந்தின் பரவல். ஆரஞ்சு நிறத்தில் உள்ள நாடுகள் ஐந்து நாள் போட்டி விளையாட தகுதி பெற்றவை. பச்சை நிறத்தில் உள்ளவை ஐந்து நாள் போட்டி விளையாடாத மற்ற முக்கிய ஐ.சி.சி உறுப்பு நாடுகள். ஊதா நிறத்தில் உள்ளவை மற்ற ஐ.சி.சி உறுப்பு நாடுகள்

இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகள். இவை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தகுதிகளைக் கொண்டுள்ளன:

நாடு அதிகார சபை அங்கத்துவம் தற்போதைய ஐசிசி ஒருநாள் தரம்
Flag of Afghanistan.svg ஆப்கானிஸ்தான் ஆப்கானித்தான் துடுப்பாட்ட சபை 2001[2] 14
Flag of Canada.svg கனடா கனேடிய துடுப்பாட்டம் 1968[1] 16
Cricket Ireland flag.svg அயர்லாந்து ஐயர்லாந்து துடுப்பாட்டம் 1993[1] 11
Flag of Kenya.svg கென்யா கென்யா துடுப்பாட்டம் 1981[1] 13
Flag of the Netherlands.svg நெதர்லாந்து நெதர்லாந்து துடுப்பாட்ட சபை 1966[1] 12
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து ஸ்கொட்லாந்து துடுப்பாட்டம் 1994[1] 15

உலகக் கோப்பை வென்ற அணிகள்[தொகு]

அணி 1975 1979 1983 1987 1992 1996 1999 2003 2007 2011
Flag of Australia.svg ஆஸ்திரேலியா
Flag of India.svg இந்தியா
Flag of Pakistan.svg பாக்கித்தான்
Flag of Sri Lanka.svg இலங்கை
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்
குறிப்பு: - உலகக் கோப்பை வென்ற அணி

துடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்[தொகு]

துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு "gentlemen's game" (en:Gentleman) என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா இலங்கை ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 "A brief history ...". Cricinfo. பார்த்த நாள் 2 May 2008.
  2. "Cricinfo-Other countries-Teams-Afghanistan". Cricinfo. பார்த்த நாள் 4 May 2008.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பாட்டம்&oldid=1694646" இருந்து மீள்விக்கப்பட்டது