டென்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டென்னிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டென்னிசு
Centre Court.jpg
விம்பிள்டன்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு சர்வதேச டென்னிசு பெடரேசன்
முதலில் விளையாடியது 1859 - 1865 இடையில் இங்கிலாந்தில்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்பு No
அணி உறுப்பினர்கள் Single or doubles
இருபாலரும் Yes, separate tours வார்ப்புரு:& mixed doubles
விளையாட்டுக் கருவிகள் டென்னிசு பந்து, டென்னிசு ரெக்கெட்
விளையாடுமிடம் Indoor or outdoor tennis court
ஒலிம்பிக் Part of Summer Olympic programme from 1896 to 1924
Demonstration sport in the 1968 and 1984 Summer Olympics
Part of Summer Olympic programme since 1988
டென்னிசு ஆட்டரங்கம். மக்கள் திரளாக வந்து ஆட்டத்தைக் காணும் காட்சி
டென்னிசுப் பந்துகள்

டென்னிசு (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளகத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.

பொருளடக்கம்

ஆடு தளம் [தொகு]

ஆடும் தளம் 23.8 மீ (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் புல்வெளி, களிமண், செம்மண், கற்காறை (கான்கிரீட்), மரம்த்தளம், செயற்கைப் புல்ல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.

பந்து [தொகு]

டென்னிசுப் பந்து உள்புறம் காலியாக (உள்ளீடு அற்றதாக) உள்ள ரப்பர் பந்து. இதன் மேல் மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும். பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் வரை இருக்கலாம். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளை கோடு போட்ட பந்துகள் பொதுவாக பயன்படுத்தப் படும்.

சல்லடை மட்டை [தொகு]

சல்லடைக் கைமட்டைகளுக்குத் (ராக்கெட்டுகளுக்கு) தீர்மான வரையறை இல்லை. இவை பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் கைப்பிடியுடன் இருக்கும். அதன் நீள்வட்டப் பகுதியின் அளவைப் பொருத்து பொதுச்சீர் (இசுட்டாண்டர்டு, Standard), நடுவளவு (மிட்சைசு, Mid size), பெரிது (ஓவர்சைசு, Over size), மிகப்பெரிது (சூப்பர் ஓவர்சைசு, Super over size) என்று வழங்கப்படும்.

டென்னிசு ஆட்டவீரர் நடால் சல்லடை மட்டையால் பந்தைத் தட்டும் காட்சி

போட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை.

சிறப்புப் போட்டிகள் [தொகு]

இவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார்.

மேலும் காண்க [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிசு&oldid=1341621" இருந்து மீள்விக்கப்பட்டது