பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீர் விளையாட்டுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு Fédération Internationale de Natation |
|
|---|---|
Logo of FINA prior to 2008 |
|
| குறிக்கோளுரை | நீரே எங்கள் உலகம் |
| தோற்றுவிக்கப்பட்ட நாள் | 1908 |
| தலைமையகம் | லோசான், சுவிட்சர்லாந்து |
| அங்கத்துவம் | 202 தேசிய கூட்டமைப்புகள் |
| தலைவர் | முனைவர். ஜூலியோ சீசர் மாக்லியோன் |
| இணையதளம் | www.fina.org |
பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு (Fédération Internationale de Natation, FINA) என்பது பன்னாட்டளவில் நடத்தப்படும் நீர் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவினால் [1] அங்கீகரிக்கப்பட்ட பல நாடுகளின் தேசியக் கூட்டமைப்புக்களின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள லோசான் நகரில் அமைந்துள்ளது. இது ஐந்து நீர் விளையாட்டுப் போட்டிகளை நிர்வகிக்கிறது: நீச்சல், நீரில் பாய்தல், ஒருங்கிசைந்த நீச்சல், நீர்ப் பந்தாட்டம் மற்றும் திறந்த நீர்வெளி நீச்சல்.
சூலை 24, 2009 தேர்ந்தெடுக்கப்பட்ட உருகுவே நாட்டு முனைவர்.ஜூலியோ மாக்லியோன் இதன் நடப்பு தலைவராக விளங்குகிறார்.[2]
காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ The International Olympic Committee online listing of the International Federations.
- ↑ Report from/on the 2009 FINA General Congress held on July 24, 2009 and published by FINA on 2009-07-24. Retrieved 2009-07-24.
வெளி இணைப்புகள்[தொகு]
- www.fina.org பினாவின் வலைத்தளம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||