மதுரவாயல்
| மதுரவயல் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | மதுரவாயல் |
| சட்டமன்ற உறுப்பினர் |
கே. பீமாராவ் (சிபிஎம்) |
| மக்கள் தொகை | 44,127 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மதுரவாயல் (ஆங்கிலம்:Maduravoyal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது சென்னை மாநகரின் எல்லையிலிருந்து 2 மைல்களுக்குள் உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.சென்னை புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் வெளி வளையச்சாலை மதுரவாயிலை கடந்து சென்னையின் வடக்கு எல்லைப்பகுதிகளுக்குச் செல்கிறது. அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகள்: கோயம்பேடு, நெற்குன்றம், அடையாளம்பட்டு, திருவேற்காடு, வளசரவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் போரூர்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,127 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மதுரவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கல்வி[தொகு]
- டாக்டர் எம்ஜியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
- இராஜராஜேசுவரி பொறியியல் கல்லூரி
- தாய் மூகாம்பிகை பல்தொழில்நுட்பக் கல்லூரி
- மீனாட்சி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
- திரு செவன்இல்சு பல்தொழில்நுட்பக் கல்லூரி
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
|
||||||||||||||||||||||||||