சென்னை மெட்ரோ
| சென்னை மெட்ரோ Chennai Metro |
|
|---|---|
| தகவல் | |
| உரிமையாளர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL)[1] |
| அமைவிடம் | சென்னை, இந்தியா |
| போக்குவரத்து வகை |
விரைவுப் போக்குவரத்து |
| மொத்தப் பாதைகள் | 5 (கட்டம் I & II) |
| நிலையங்களின் எண்ணிக்கை |
41 (கட்டம் I + விரிவு) |
| தலைமையகம் | சென்னை |
| இணையத்தளம் | http://www.chennaimetrorail.gov.in/ |
| இயக்கம் | |
| Operation will start | 2013 |
| இயக்குனர்(கள்) | சிஎம்ஆர்எல் |
| வண்டிகளின் எண்ணிக்கை | 42 (முதற்கட்டம்) |
| தொடர்வண்டி நீளம் | 86.5 மீ |
| நுட்பத் தகவல் | |
| அமைப்பின் நீளம் | 117.046 கிமீ (72.73 மை) [முதற்கட்டம், விரிவாக்கம் மற்றும் இரண்டாம் கட்டம்] |
| இருப்புபாதை அகலம் | சீர்தர அகலம் |
| மின்னாற்றலில் | 25 கேவி, 50 ஹெர்ட்ஸ் ஏசி மேற்புற சங்கிலியம் வழியே |
| உச்ச வேகம் | 80 km/h (50 mph) |
சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும். மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் புது தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்து இருக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் கட்டப்பட உள்ளன.
முதல் கட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. 2014-2015 ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டத்தின் கட்டுமானம் முடிவுற்று பொதுப் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு பொதுப்போக்குவரத்து திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக, தில்லி மெட்ரோ இருப்புவழி கழகத்தின் தலைவர், திரு. E. ஸ்ரீதரன், திட்டவரைவினை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அளித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற மு. கருணாநிதி அவர்களால் அத்திட்டம் தூசுதட்டி எடுக்கப்பட்டு, செயல் வடிவம் கொடுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டின் 2007-2008 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ தொடருந்து திட்டம் உள்ளடக்கப்பட்டது. அப்போது, விரிவான திட்ட அறிக்கையை ஆயத்தம் செய்ய தமிழக அரசு சார்பில், இத்திட்டத்திற்கான தொடக்க நிதியாக உரு. 50 கோடி ஒதுக்கப்பட்டது. மெட்ரோ பணிகளுக்காக, தமிழக அமைச்சரவை, நவம்பர் 7-ஆம் நாள், 2007- ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கென "சென்னை மெட்ரோ இருப்புவழி லிமிட்டெட்" என்ற நிறுவனத்தை அரசு நிறுவியுள்ளது.
திட்ட மதிப்பீடு [தொகு]
2007 ஆம் ஆண்டில், இத்திட்டம் வரையப்பட்டபோது, இதன் மதிப்பீடு 9565 கோடியாக இருந்தது. தற்போது இத்திட்டத்திற்கான முதல் கட்டத்திற்கு தோராயமான மதிப்பீடு, சற்றொப்ப 14,600 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
திட்ட நிதி [தொகு]
மதிய அரசும், தமிழக அரசும், இத்திட்டத்திற்கு நிதி பங்களிக்க முன்வந்துள்ளன. மேலும், ஜப்பானிய வங்கியொன்றும் இத்திட்டத்திற்குப் பங்களிக்கின்றது.
முதல் கட்டம் [தொகு]
திட்ட விரிவரிக்கையின்படி, முதல் கட்டத்தில் இரண்டு மெட்ரோ இருப்புவழிகள் அமைய உள்ளன.
முதல் இருப்புவழி [தொகு]
வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை பன்னாட்டு விமான நிலையம்
நீளம்: 23.085 கீ. மீ ( இதில் 14.3 கீ. மீ தரைக்கடியில்)
| Chennai Metro Phase I
Line 1: Wimco Nagar — Chennai Aiport [32.1 km] |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மெட்ரோ தொடருந்து நிலையம் |
முதல் நிலையத்தில் இருந்து தொலைவு (கீ.மீ) |
தரை மட்டத்தில் இருந்து ஆழம்/உயரம் (மீட்டரில்) |
மேடை எண்ணிக்கை விவரம் |
நிலைய அமைப்பு |
|---|---|---|---|---|
| வண்ணாரப்பேட்டை | 0.5 | -12.009 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| மண்ணடி | 2.0 | -13.469 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| சென்னை கோட்டை | 3.3 | -12.499 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| சென்னை சென்ட்ரல் | 4.4 | -17.203 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமக் கட்டிடம் |
5.6 | -14.190 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| எல்.ஐ.சி கட்டிடம் | 7.3 | -14.096 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| ஆயிரம் விளக்கு | 8.3 | -13.853 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| அண்ணா மேம்பாலம் | 9.5 | -14.569 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| தேனாம்பேட்டை | 10.7 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| சேமியர்ஸ் சாலை | 12.1 | -13.917 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| சைதாப்பேட்டை | 13.8 | -12.482 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| சின்ன மலை | 15.0 | 12.382 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| கிண்டி | 16.2 | 13.468 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| ஆலந்தூர் | 17.8 | 9.343 | மத்திய மேடை | உயர் பாலத்தில், நேர் |
| அலுவலர் பயிற்சி அக்கடமி | 18.9 | 13.382 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| இந்தியன் ஏர்லைன்ஸ் காலனி | 20.6 | 11.838 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| மீனம்பாக்கம் | 21.5 | 12.929 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், சற்று வளைந்து |
| சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் | 22.9 | 8.918 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
இரண்டாம் இருப்புவழி [தொகு]
சென்னை சென்ட்ரல் - சென்னை எழும்பூர் - வேப்பேரி - ஷெனாய் நகர் - அண்ணா நகர் - திருமங்கலம் - அரும்பாக்கம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் - வடபழனி - அசோக் நகர் - கே.கே நகர் - கிண்டி தொழிற்பேட்டை - ஆலந்தூர் - பரங்கி மலை.
நீளம்: 21.961 கீ. மீ ( இதில் 9.7 கீ. மீ தரைக்கடியில்)
| மெட்ரோ தொடருந்து நிலையம் |
முதல் நிலையத்தில் இருந்து தொலைவு (கீ.மீ) |
தரை மட்டத்தில் இருந்து ஆழம்/உயரம் (மீட்டரில்) |
மேடை எண்ணிக்கை விவரம் |
நிலைய அமைப்பு |
|---|---|---|---|---|
| சென்னை சென்ட்ரல் | 0.4 | -17.203 | இருபக்க மேடை | தரைக்கடியில், நேர் |
| எழும்பூர் | 1.8 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், சற்று வளைந்து |
| நேரு பூங்கா | 3.09 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், சற்று வளைந்து |
| கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி | 3.9 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், சற்று வளைந்து |
| பச்சையப்பா கல்லூரி | 4.9 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், சற்று வளைந்து |
| ஷெனாய் நகர் | 6.1 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| அண்ணா நகர் - கிழக்கு | 7.1 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| அண்ணா நகர் கோபுரம் | 8.3 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| திருமங்கலம் | 9.1 | -14.069 | மத்திய மேடை | தரைக்கடியில், நேர் |
| கோயம்பேடு | 10.9 | 13.274 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) | 12.3 | 13.029 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| அரும்பாக்கம் | 13.7 | 13.395 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| வடபழனி | 14.8 | 21.5 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| அசோக் நகர் | 16.2 | 13.365 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| கே. கே. நகர் | 17.2 | 13.297 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| கிண்டி தொழிற்பேட்டை | 18.8 | 13.224 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
| ஆலந்தூர் | 20.3 | 14.843 | மத்திய மேடை | உயர் பாலத்தில், நேர் |
| பரங்கி மலை | 21.5 | 8.782 | இருபக்க மேடை | உயர் பாலத்தில், நேர் |
கட்டண தகவல்கள் [தொகு]
| தொலைவு (கீ. மீ -யில்) | கட்டணம் (ரூ |
|---|---|
| 0 - 2 | 8.00 |
| 2 - 4 | 10.00 |
| 4 - 6 | 11.00 |
| 6 - 9 | 14.00 |
| 9 - 12 | 15.00 |
| 12 - 15 | 17.00 |
| 15 - 18 | 18.00 |
| 18 - 21 | 19.00 |
| 21 - 24 | 20.00 |
| 24 - 27 | 22.00 |
| >27 | 23.00 |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Home Page of Chennai Metro Rail Limited". Chennaimetrorail.gov.in. பார்த்த நாள் 2010-08-16.
|
|||||||||||