சென்னை எழும்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chennai Egmore station.JPG

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.

வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து, 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_எழும்பூர்&oldid=761707" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்