கிண்டி தேசியப் பூங்கா
| கிண்டி தேசியப் பூங்கா | |
| — தேசியப் பூங்கா — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| அமைக்கப்பட்டது | 1977 |
| அருகாமை நகரம் | சென்னை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
2.70 square kilometres (1.04 ச மைல்) • 6 metres (20 ft) |
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
• 1,200 mm (47 in) |
| பார்வையாளர்கள்/ஆண்டு | 700,000/2006[1] |
| நிர்வாக அமைப்பு | மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை |
| இணையதளம் | http://www.forests.tn.nic.in/WildBiodiversity/np_gnp.html |
கிண்டி தேசியப் பூங்கா சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். ஒரு மாநகரின் எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் மில்பர்ட்டு ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது, பின்னர் 1958-இல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது.
[தொகு] தாவரங்கள்
இந்த தேசிய பூங்கா உலர்/வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்களைக் கொண்டது. இங்கு 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள் காணப்படுகிறது[2].
[தொகு] விலங்குகள்
இங்கு 14 பாலூட்டி சிற்றினங்கள் உள்ளன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற அதிக தொகையில் காணப்படுபவையாகும். 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் இங்கு உண்டு. மேலும் பல்வேறு வகையான தவளைகள், ஊர்வன சிற்றினனங்களும் இங்கு காணப்படுகிறது[3].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Gunidy National Park". தமிழ் நாடு வனத்துறை. பார்த்த நாள் 2007-09-06.
- ↑ Care Earth (August 2006)Rapid Assessment of Biodiversity on the Campus of Indian Institute of Technology - Madras, The Director, Indian Institute of Technology Madras Chennai - 600 036, retrieved 9/5/2007An Urban Wilderness Revisited, p. 2
- ↑ Oppili P. (Nov 16, 2004) The Hindu, retrieved 5/14/2007 "Looking for exotic species at the Guindy National Park"