சென்னைத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை (Madras Tamil , Madras bashai) என்பது சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்படும் வட்டார வழக்கு மொழி. சிறிது தெலுங்கு கலந்த பேசப்படும் இது மற்ற எல்லா இடங்களில் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டது. பிற மாவட்ட மக்களும் மாநில மக்களும் சென்னையில் அதிக அளவில் குடியேறியதால் வடசென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் பெரும்பாலும் வழக்கற்று போய்விட்டது. அர்பன்தமிழ் என்ற இணையத் திட்டத்தின் மூலம் சில சொற்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன [1]

செந்தமிழ் சென்னைத் தமிழ் பொருள்
இருக்கிறாய் கீறே இருக்கிறாய்.
இருக்கிறது கீது இருக்கிறது
இழுத்துக்கொண்டு இஸ்துகினு இழுத்தல்
கூட்டிக்கொண்டு இட்டுகினு அழைத்துக் கொண்டு
அப்புறம் அப்பாலே பிறகு
கிழித்துவிடுவேன் கீசீடுவேன் கிழித்துவிடுவேன்
உட்காருங்கள் குந்து அமரவும்
கிண்டல் பண்றே கலாய்க்கறே கேலி செய்தல்
அங்கே அந்தாண்ட அங்கு

சான்றுகள்[தொகு]

  1. http://urbantamil.com
"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்னைத்_தமிழ்&oldid=1722542" இருந்து மீள்விக்கப்பட்டது