பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1664
தலைமையகம்பாரிசு
தொழில்துறைவணிகம்
இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள்.
பிரெஞ்சுத் தாக்கத்தின் உச்சத்தில் 1741-1754.
கிழக்கு இந்தியக் கம்பனி படையணியின் கொடி.

பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அல்லது பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (French East India Company, பிரெஞ்சு மொழி: La Compagnie française des Indes orientales அல்லது Compagnie française pour le commerce des Indes orientales) 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது குடியேற்றவாத இந்தியாவில் பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.

கிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குனராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக சப்பானில் இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்[1] மற்றும் இசஃபகான், பெர்சியாவில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு [2] இயக்குனர்களாக இருந்தனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Caron lived in Japan from 1619 to 1641. A Collector's Guide to Books on Japan in English By Jozef Rogala, p.31 [1]
  2. McCabe, p.104

நூலாதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]