திற்பரப்பு அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திற்பரப்பு நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டம்

திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது[1].

திற்பரப்பு அருவி அருகிலுள்ள கோவில்

திற்பரப்பு அருவியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன.

Thirparappu Waterfalls.JPG
திற்பரப்பு நீர்வீழ்ச்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. நாஞ்சில் ஆன்லைன்
"http://ta.wikipedia.org/w/index.php?title=திற்பரப்பு_அருவி&oldid=1466930" இருந்து மீள்விக்கப்பட்டது