நொய்யல் ஆறு
நொய்யல் ஆறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகிறது. இது கோயமுத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. ஆகவேதான் நொய்யல் ஆறு என்று பெயர்பெற்றது. இந்த ஆற்றின் சங்ககால பெயர் காஞ்சிமா நதி என்பதாகும்.
வெள்ளிங்கிரி மலையிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் நொய்யல் ஆறு கோயம்புத்தூர் நகரை கடக்கும் போது அந்நகரைச்சுற்றியுள்ள 18 குளங்களை நிறைத்து பின் பின்னலாடை நகரமான திருப்பூரை அடைகிறது. திருப்பூரிலிருந்து 16 கிமீ தொலைவில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
தொல்லியற் துறைச் சான்றுகளின் படி நொய்யல் ஆற்றின் நாகரிகம் கி.மு 300க்கும் கி.பி 300க்கும் இடையில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இவ் ஆற்றின் பெயர் மென்மையான நுண்ணிய மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது.[1]
மாசு [தொகு]
நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்று. கோயம்புத்தூர் நகரை கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. திருப்பூரை கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடையச்செய்கின்றன. சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறை கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு வேளாண்மைக்கும் குடிப்பதற்கும் ஆகாத நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் அமைப்பினர் நொய்யல் ஆற்றை இறந்த ஆறு என்கின்றனர்.
இக்கழிவுகள் எல்லாம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளன. அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர். ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்சநீதி மன்றம், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு வசதி இல்லாத ஆலைகளின் உரிமம் பறிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கரையில் அமைந்த ஊர்கள் [தொகு]
உசாத்துணை [தொகு]
- http://greenbusinesscentre.com/images/Photos/SIR49.pdf
- http://hindu.com/thehindu/fline/fl2217/stories/20050826004512000.htm
- http://www.cpcb.nic.in/Highlights/Highlights05/ch-6.html
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |
|
||||||||||||||||||||||||||