தக்கன்
தட்சன் பிரஜாபதிகளில் ஒருவர். இவர் பிரம்மாவின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் பிரசுதி. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயினி, ரேவதி மற்றும் கார்த்திகை உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி இன்னும் பல பேர். இதில் தாட்சாயினி இவரின் விருப்பத்திற்கு மாறாக சிவனை திருமணம் செய்துகொண்டமையால் தட்சன் செய்த மகா வேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அது மட்டுமன்றி சிவனுக்கு கொடுக்கவேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். இதன் விளைவாக சிவனால் ஏவப்பட்ட வீரபத்திரனும், தேவியால் அனுப்பப்பட்ட பத்ரகாளியும் யாகசாலையை அழித்து தட்சனையும் கொன்றனர். மற்ற மகள்களான 27 நட்சத்திரங்களும் சந்திரனை மணந்தனர். ரதி மன்மதனை மணந்தார். தட்சன் செய்த மகாயாகம் கேரளா மாநிலம் கண்ணூரில், கோட்டியூர் எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.