கல்லணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்லணை
கல்லணையில் காவிரி

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

[தொகு] துணுக்கு

சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.[1].

[தொகு] மேற்கோள்கள்

  1. பக் 38, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். pp. 87. ISBN 81-87371-07-2. 

[தொகு] வெளி இணைப்புகள்

காவிரி ஆறு
அணைகள்

பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை |

துணையாறுகள்

அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு |
லட்மண தீர்த்தம் ஆறு | ஹாரங்கி ஆறு | நொய்யல் ஆறு | பம்பார் ஆறு | சிம்சா ஆறு

கிளையாறுகள்

கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி

நகரங்களும் ஊர்களும்

காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி

புவியியல் அமைப்புகள்

வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை

பாசன மாநிலங்கள் மற்றும்
ஆட்சிப்பகுதிகள்

கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு

"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்லணை&oldid=1111042" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்