திருவையாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவையாறு
—  பேரூராட்சி  —
திருவையாறு
இருப்பிடம்: திருவையாறு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.88°′″N 79.1°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 10.88°′″N 79.1°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் கே. பாஸ்கரன் [3]
பெருந்தலைவர் ஆர்.செந்தில்மணி
சட்டமன்றத் தொகுதி திருவையாறு
சட்டமன்ற உறுப்பினர்

ரத்தினசாமி (அதிமுக)

மக்கள் தொகை 14,511 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


38 metres (125 ft)

திருவையாறு (Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 13 கி.மி. தொலைவில் பெரம்பலூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226 ல் திருவையாறு அமைந்துள்ளது.

[தொகு] வரலாறு

[தொகு] பெயர்க் காரணம்

திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

[தொகு] திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்

பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபருாணத்தின் படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

[தொகு] தியாகராஜ ஆராதனை விழா

கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு சென்னையில் ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

[தொகு] ஏழூர் பல்லக்கு-சப்தஸ்தானம்

சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்கும். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்கும்.

[தொகு] கல்லூரிகள்

  • அரசு கலை அறிவியல் கல்லூரி
  • அரசு இசைக் கல்லூரி

[தொகு] பள்ளிகள்

  • அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி
  • சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி
  • தூய வளனார் மேனிலைப் பள்ளி
  • அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவையாறு&oldid=1074026" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்