கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும்,அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது.

சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.

இறைவன்: அக்னீச்வரர்

அம்பாள் : கற்பகாம்பாள்

விருட்சம்: புரச மரம்

தீர்த்தம்: அக்னி தீர்த்தம்

பதிகம்: அப்பர்

நவக் கிரகத் தலம்: சுக்ரன்

இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப் படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன.சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது.

நவக்கிரகத் தலங்களில் ,இது சுக்கிரனுடைய தலமாகும்.

சுக்கிரனின் நிறம் வெண்மை.

வாகனம்: முதலை

தான்யம்: மொச்சை

உணவு; மொச்சைப் பொடி கலந்த சாதம்

வச்திரம் (துணி) : வெள்ளைத் துணி

மலர்: வெண்தாமரை

இரத்தினம்: வைரம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]