உப்பிலியப்பன் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பிலியப்பன் கோயில் இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவக் கோவில் ஆகும்.
பொருளடக்கம் |
பெயர்க்காரணம் [தொகு]
- திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்
- ஒப்பிலியப்பன் என்ற திருநாமம் பெருமாளுக்கு அமைந்தது.காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. [1] இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.
- பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
அமைவிடம் [தொகு]
கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
அருகில் அமைந்த கோயில் [தொகு]
- திருநாகேஸ்வரம் (கோயில்) (2 கி.மீ.)