நம்மாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நம்மாழ்வார்
பிறப்பு Script error: No such module "br separated entries".
காணாமல்போனது Script error: No such module "br separated entries".
இறப்பு Script error: No such module "br separated entries".
கல்லறை Script error: No such module "br separated entries".

நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.

வரலாறு[தொகு]

நம்மாழ்வார்

நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திரு மகனாராக சூத்திர குலத்தில் பிறந்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கி பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.

நூல்கள்[தொகு]

நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய 4 நூல்களை இயற்றினார். இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

பிறபெயர்கள்[தொகு]

கீழ்கண்ட 34 பெயர்கள் அனைத்தும் நம்மாழ்வாரின் பிறபெயர்களாகும்

 1. சடகோபன்
 2. மாறன்
 3. காரிமாறன்
 4. பராங்குசன்
 5. வகுளாபரணன்
 6. குருகைப்பிரான்
 7. குருகூர் நம்பி
 8. திருவாய்மொழி பெருமாள்
 9. பெருநல்துறைவன்
 10. குமரி துறைவன்
 11. பவரோக பண்டிதன்
 12. முனி வேந்து
 13. பரப்ரம்ம யோகி
 14. நாவலன் பெருமாள்
 15. ஞான தேசிகன்
 16. ஞான பிரான்
 17. தொண்டர் பிரான்
 18. நாவீரர்
 19. திருநாவீறு உடையபிரான்
 20. உதய பாஸ்கரர்
 21. வகுள பூஷண பாஸ்கரர்
 22. ஞானத் தமிழுக்கு அரசு
 23. ஞானத் தமிழ் கடல்
 24. மெய் ஞானக் கவி
 25. தெய்வ ஞானக் கவி
 26. தெய்வ ஞான செம்மல்
 27. நாவலர் பெருமாள்
 28. பாவலர் தம்பிரான்
 29. வினவாது உணர்ந்த விரகர்
 30. குழந்தை முனி
 31. ஸ்ரீவைணவக் குலபதி
 32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
 33. மணிவல்லி
 34. பெரியன்

நம்மாழ்வார் குலம் குறித்த கருத்து வேறுபாடுகள்[தொகு]

நம்மாழ்வார் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அவர் பிள்ளைமார் எனும் குலத்தில் பிறந்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நம்மாழ்வார்&oldid=1741749" இருந்து மீள்விக்கப்பட்டது