காரைக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காரைக்கால்
—  city  —
காரைக்கால்
இருப்பிடம்: காரைக்கால்
, பாண்டிச்சேரி
அமைவிடம் 10°49′52″N 79°43′6″E / 10.83111, 79.71833அமைவு: 10°49′52″N 79°43′6″E / 10.83111, 79.71833
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் பாண்டிச்சேரி
மாவட்டம் காரைக்கால்
ஆளுநர் இக்பால் சிங்[1]
முதலமைச்சர் ந. ரங்கசாமி[2]
மக்கள் தொகை 227 (2009)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.karaikal.gov.in

காரைக்கால் (ஆங்கிலம்:Karaikal), இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 227,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். காரைக்கால் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்கால் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் என்று இரண்டு மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுக நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், டைல்ஸ் மற்றும் ரசாயண‌ தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம். பக்தர்கள் குவியும் திருநள்ளாறு காரைக்காலை ஒட்டிய திருத்தலம்.

[தொகு] சுற்றுலாத் தகவல்கள்

காரைக்காலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள்:

  1. காரைக்கால் அம்மையார் கோவில்
  2. திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோயில்,(சனீஸ்வர ஸ்தலம்),காரைக்கால்
  3. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை - காரைக்காலிலிருந்‌து 14 கி.மீ
  4. நாகூர் தர்கா - காரைக்காலிலிருந்‌து 15 கி.மீ
  5. வேளாங்கண்ணி மாதா திருத்தலம் - காரைக்காலிலிருந்‌து 28 கி.மீ
  6. சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் - காரைக்காலிலிருந்‌து 25 கி.மீ
  7. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் - காரைக்காலிருந்து 20 கி.மீ

[தொகு] ஆதாரங்கள்

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

[தொகு] வெளி இணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்&oldid=1100579" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்