தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.
தொகுதி மறு சீரமைப்பு [தொகு]
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றுள்ளது. அதே போன்று நாகை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றுள்ளது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.
தஞ்சாவூரின் தற்போதய உறுப்பினர் பழனி மாணிக்கம் 2004ல் இருந்து இந்திய அரசில் நிதித்துறை இணை அமைச்சராக உள்ளார்.
மக்களை உறுப்பினர்கள் [தொகு]
இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
- 1951 - இரா. வெங்கட்ராமன் - காங்கிரசு.
- 1957 - இரா. வெங்கட்ராமன் - காங்கிரசு.
- 1962 - வைரவத்தேவர் - காங்கிரசு.
- 1967 - கோபாலர் - திமுக
- 1971 - எஸ்.டி.சோமசுந்தரம் - திமுக
- 1977 - எஸ்.டி.சோமசுந்தரம் - அதிமுக
- 1980 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
- 1984 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
- 1989 - சிங்காரவடிவேல் - காங்கிரசு.
- 1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்கிரசு.
- 1996 - எஸ். எஸ். பழனிமாணிக்கம் - திமுக
- 1998 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக
- 1999 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக
- 2004 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக
- 2009 - எஸ். எஸ். பழனிமாணிக்கம்- திமுக
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]
13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் பழனிமாணிக்கம் மதிமுகவின் துரை பாலகிருட்டினனை 101,787 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| பழனிமாணிக்கம் | திமுக | 408,343 |
| துரை பாலகிருட்டினன் | மதிமுக | 306,556 |
| பி. இராமநாதன் | தேமுதிக | 63,852 |
| எசு. சரவணன் | பகுஜன் சமாஜ் கட்சி | 5,811 |
| முருகராஜ் | சுயேச்சை | 9,805 |
|
|||||