திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்

ஆள்கூறுகள்: 10°59′40″N 79°27′01″E / 10.99444°N 79.45028°E / 10.99444; 79.45028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
கம்பகரேஸ்வரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:10°59′40″N 79°27′01″E / 10.99444°N 79.45028°E / 10.99444; 79.45028
பெயர்
பெயர்:கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவு:திருபுவனம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கம்பகரேசுவரர் (சிவன்)
தாயார்:அறம் வளர்த்த நாயகி (பார்வதி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:மூன்றாம் குலோத்துங்க சோழன்

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பகோணம் அருகில் திருபுவனம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

ராஜகோபுரம்

இக்கோயில் கும்பகோணம் அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன.

தலவரலாறு[தொகு]

பிரகலாதன், திருமால், தேவர்கள், மக்கள் முதலானவர்களுக்கு விளைந்த கம்பத்தினை(நடுக்கத்தை) நீக்கியருளியதால் இத்தல இறைவன் கம்பகரேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

இறைவன், இறைவி[தொகு]

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் ஸ்ரீகம்பகரேசுவரர். தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள். திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும். இத்தலத்து அம்பாளுக்கு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி என்ற பெயர் வழங்குகின்றது.

சிறப்பு[தொகு]

சரபேஸ்வரர் சன்னதி

இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உள்ளார்.[2]சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.இக்கோயிலின் விமான அமைப்பு மேற்கண்ட கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே அமைந்துள்ளது.

சரபேசுவரர்[தொகு]

இத்தலத்தில் சரபேசுவரர்க்கு தனி சந்நிதி உள்ளது.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தினமலர் கோயில்கள், அருள்மிகு கம்பகரேஸ்வரர் கோயில்
  3. http://temple.dinamalar.com/New.php?id=389 அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்

வெளி இணைப்புகள்[தொகு]

புகைப்படத்தொகுப்பு[தொகு]