கபினி ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபினி அல்லது கபனி ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து பின் வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது.