பாணதீர்த்தம் அருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாணதீர்த்தம் அருவி |
|
| அமைவிடம் | காரையார் |
|---|---|
பாணதீர்த்தம் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட காரையார் அணை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.
பொருளடக்கம் |
அமைவிடம் [தொகு]
இது பாபநாசத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், காரையார் அணை அருகே அமைந்துள்ளது.
சுற்றுலா [தொகு]
அகத்தியர் அருவியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து [தொகு]
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து காரையார் அணைக்கு பேருந்து வசதி உள்ளது.காரையார் அணையிலிருந்து படகில் 15 நிமிட பயணத்திற்கு பிறகு அருவியை அடையலாம்.படகில் சென்று வர கட்டணமாக ருபாய் 30 வசூலிக்கப்படுகிறது.