மகாராட்டிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகாராஷ்டிரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாராட்டிரா

महाराष्ट्र

—  மாநிலம்  —
Official முத்திரை, மகாராட்டிரா
முத்திரை
இடது மேலிருந்து கடிச்சுற்றாக: இந்தியாவின் நுழைவாயில், அஜந்தா குகைகள், சத்ரபதி சிவாஜி மற்றும் விநாயக சதுர்த்தியின் போது கணேச சிலை


இருப்பிடம்: மகாராட்டிரா
அமைவிடம் 18.96°′″N 72.82°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 18.96°′″N 72.82°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் மகாராட்டிரா
மாவட்டங்கள் 35
நிறுவப்பட்ட நாள் 1 மே 1960
(மகாராட்டிரா தினம்)
தலைநகரம் மும்பை
மிகப்பெரிய நகரம் மும்பை
ஆளுநர்
முதலமைச்சர் பிரித்திவிராசு சவான்
ஆளுநர்கள் கே. சங்கரநாராயணன்
துணை முதலமைச்சர் அஜித் பவார்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஈரவை (288 + 78)
மக்கள் தொகை

அடர்த்தி

96 (2nd) (2001)

314.42 /km2 (814 /sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.689 (medium) (6th)
கல்வியறிவு 77.6% (6வது)
மொழிகள் மராத்தி[1][2]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 307713 கிமீ2 (118809 சதுர மைல்)[3]
ISO 3166-2 IN-MH
இணையதளம் maharashtra.gov.in


மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्र mahārāṣṭra, IPA Sound [məharaːʂʈrə]) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றியஆட்சிப் பகுதிகள் யாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில்ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.

முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே1,1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது..

மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%உம் பங்களிக்கிறது.[4][5][6][7]

[தொகு] பிரிவுகள்

மகாராட்டிராவில் மொத்தம் 35 மாவட்டங்கள் உள்ளன. அவை ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத் மண்டலம், புணே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம், நாந்தெட் மண்டலம் ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும். நிலப்பரப்பு,அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும். 1.விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள்), 2.மராத்வாடா (ஔரங்காபாத் மண்டலம்), 3.வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் (நாசிக் மண்டலம்), 4.மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் (புணே மண்டலம்), 5.கொங்கண் (கொங்கண் மண்டலம்).

[தொகு] மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [8]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 96,878,627 100%
இந்துகள் 77,859,385 80.37%
இசுலாமியர் 10,270,485 10.60%
கிறித்தவர் 1,058,313 1.09%
சீக்கியர் 215,337 0.22%
பௌத்தர் 5,838,710 6.03%
சமணர் 1,301,843 1.34%
ஏனைய 236,841 0.24%
குறிப்பிடாதோர் 97,713 0.10%


[தொகு] மேற்கோள்கள்

  1. "Maharashtra Tourism: Trivia". Official website of Maharashtra Tourism. Government of Maharashtra. பார்த்த நாள் 2007-07-16.
  2. Palkar, A.B (2007). "Report of One Man Commission Justice A.B.Palkar: Shri Bhaurao Dagadu Paralkar & Others V/s State of Maharashtra". பார்த்த நாள் 2007-07-16.
  3. ""Maharashtra", Government of India, Ministry of Home Affairs, National Informatics Centre. (NIC)" (PDF). பார்த்த நாள் 2007-05-01.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Introduction to Maharashtra Government". Maharashtraweb.com. பார்த்த நாள் 2008-10-31.
  5. [1]
  6. "India - Maharashtra". Worldbank.org.in. பார்த்த நாள் 2008-10-31.
  7. GDP of Indian states
  8. Census of india , 2001

"http://ta.wikipedia.org/w/index.php?title=மகாராட்டிரம்&oldid=1125061" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்