காவிரிப்பூம்பட்டினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
- சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
- கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
- புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
- எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [1]
- நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [2]
பொருளடக்கம் |
[தொகு] பெயர் வரலாறு
- காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் > காவிரிப்பூம்பட்டினம்
- ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்' என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)
[தொகு] சங்ககால நிலை
[தொகு] பட்டினப்பாலை கூறும் செய்திகள்
[தொகு] சங்கப்பாடல் தரும் செய்திகள்
[தொகு] புலவர்கள்
[தொகு] அரசு
[தொகு] சிலப்பதிகாரம், மணிமேகலை தரும் செய்திகள்
[தொகு] கடற்கோள்
- காண்க. நாகநாடு