திருநங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம்
பாலியல் நாட்டம்
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
நங்கை
நம்பி
நங்கை, நம்பி, ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
சகோதரி (அமைப்பு)
சினேகிதன் (அமைப்பு)
இப்படிக்கு ரோஸ்
ஓரினம்.நெட்
ஸ்ருஷ்டி

தொகு
திருநங்கைகள் கொடி
A trans woman with XY written on her hand, at a protest in Paris, October 1, 2005.

திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

சேவகர் பணி[தொகு]

விரைத் தறிப்புச் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னைப் பெண்ணாக, அல்லது ஆணாக அடையாளப்படுத்தலாம். எதிர்பால் உடையணிபவர்களையும் அலி என அழைப்பதுண்டு. முன்னைய காலத்தில் சேவகர்கள் விரைத் தறிப்புச் செய்யப்பட்டு சேவைக்கு அமர்த்தப்படுவதுண்டு. குறிப்பாக அந்தப்புரத்தில் சேவைக்கு இவர்கள் அமர்த்தப்படுவதுண்டு. மகாபாரதத்தில் அர்ச்சுனன் அலியாக இருந்தாகவும், சிகண்டி என்ற அலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.[1]

சமூக சிக்கல்கள்[தொகு]

இந்தியா[தொகு]

பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். திருநங்கைகள் தங்களின் உரிமைகளை பெற தற்போது பெரிதளவில் முயன்று வருகின்றனர். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது.

ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில் திருநங்கை என்பவள்.. "மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய் பிறந்தவள் வலியின் வலியை தாங்கியவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"

கனடா[தொகு]

திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.

பண்பாடு[தொகு]

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.

திருநங்கையர் தினம்[தொகு]

திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது.இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு, மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூத்தாண்டவர் திருவிழா[தொகு]

ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாயச் சடங்கு அது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மகாராசன் (தொகுத்தது). (2007). அரவாணிகள்: உடலியல், உளவியல், வாழ்வியல். சென்னை: தோழமை வெளியீடு. பக்கம்: 152.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருநங்கை&oldid=1589976" இருந்து மீள்விக்கப்பட்டது