திண்டுக்கல் மாவட்டம்
| திண்டுக்கல் மாவட்டம் | |
திண்டுக்கல் மாவட்டம்:அமைந்த இடம் |
|
| தலைநகரம் | திண்டுக்கல் |
| மிகப்பெரிய நகரம் | திண்டுக்கல் |
| ஆட்சியர் |
{{{ஆட்சியர்}}} |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
ஏ. சரவணன் [1] |
| ஆக்கப்பட்ட நாள் | 15.09.1985 |
| பரப்பளவு | 6266.64 கி.மீ² (303வது) |
| மக்கள் தொகை (2001 வருடம் அடர்த்தி |
19,23,014 (208வது) 317/கி.மீ² |
| வட்டங்கள் | 8 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 14 |
| நகராட்சிகள் | 3 |
| பேரூராட்சிகள் | 24 |
| ஊராட்சிகள் | 306 |
| வருவாய் கோட்டங்கள் | 3 |
திண்டுக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திண்டுக்கல் ஆகும்.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
திண்டுக்கல் பாண்டிய நாட்டை சேர்ந்தது.1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும்.
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை குறிப்பிடத்தக்க ஒன்று
ஒட்டன்சத்திரம் [தொகு]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒட்டன்சத்திரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுமேயாகும்.
இந்த சந்தை பகுதியில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பபடுகின்றன.
எல்லைகள் [தொகு]
வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை மாவட்டமும், தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் கோயம்புத்தூர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 19,23,014 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நிர்வாகம் [தொகு]
இம்மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ தினமணி செய்தி 7 மாவட்டங்களுக்கு புதிய காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்
- ↑ 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
வெளி இணைப்புகள் [தொகு]
- திண்டுக்கல் மாவட்டம் - Dindigul District
- திண்டுக்கல் நகரின் சிறப்பு தினமலர்
- திண்டுக்கல் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்
- திண்டுக்கல் மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்
- திண்டுக்கல்
|
||||||||||||||
|
||||||||||||||||||||