திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் (DINDIGUL PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திண்டுக்கல்லில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,204 ஆகும். அதில் ஆண்கள் 75,630; பெண்கள் 75,574 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 38,160 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 19,005; பெண்கள் 19,155 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 245 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 121; பெண்கள் 124 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

  1. அ வெள்ளோடு
  2. அடியனூத்து
  3. அணைப்பட்டி
  4. பாலகிருஷ்ணாபுரம்
  5. செட்டிநாயக்கன்பட்டி
  6. கோவிலூர்
  7. குறும்பபட்டி
  8. முள்ளிபாடி
  9. பள்ளப்பட்டி
  10. பெரியகோட்டை
  11. சீலப்பாடி
  12. சிறுமலை
  13. தாமரைபாடி
  14. தொட்டனூத்து

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Panchayat Union Population
  3. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்