கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யம்பாளையம் (ஆங்கிலம்:Ayyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,131 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அய்யம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அய்யம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மண்ணின் மைந்தர்கள் [தொகு]
- சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறந்தது இக்கிராமத்திலிருந்து 10 கிமி தொலைவில் உள்ள வத்தலக்குண்டு என்று பலர் கூறுவார்கள். சுப்பிரமணிய சிவாவின் மூதாதையர்கள் இந்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து வந்ததாக சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.
- இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் மூதாதையர்கள் இக்கிராமத்தில் தற்போது போஸ்ட் ஆபீஸ் அமைந்துள்ள தெருவில் உள்ள ஒரு வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்கள். பின்னர் இசைத்துறையில் வாய்ப்பு வேண்டி மதுரைக்கு புலம் பெயர்ந்ததாக அவ்வீட்டில் வசித்து வரும் பிரமாணர்கள் கூறுகிறார்கள். ஏனோ தெரியவில்லை சுப்புலட்சுமி அவர்கள் தனது பூர்வீகத்தை கடைசிவரை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.
- இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. இவர் பட்டிவீரன்பட்டியில் இருந்த சவுந்தரபாண்டிய நாடாரின் உற்ற நண்பர் ஆவார்.
- ராமலிங்க நாடாவி அவர்களின் மகள் பெருமாள் அம்மாளின் கணவர் அமரர் கிருஷ்ண சாமி பல்லவராயர் என்பவர் ஃபார்வார்டு பிளாக் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு இந்த ஊரில் முதன் முதலாக நடந்த பஞ்சாயத்து போர்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்யம்பாளையம் பஞ்சாயத்து போர்டில் துணைத் தலைவராக ஆனார். பின்னர் சிலகாலம் தலைவராகவும் இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கொடியை அகற்றி அதே கம்பத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றி பரபரப்பு ஏற்படுத்தியவர். இதனால் ஏற்பட்ட கலவரங்களும் அரசியல் சலசலப்புகளும் இன்றளவும் இக்கிராமத்து மக்களால் பேசப்படுகிறது.
கோயில்கள் [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.