இராமநாதபுரம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
TN Districts Ramanathapuram.png

இராமநாதபுரம் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் இராமநாதபுரம்
மிகப்பெரிய நகரம் பரமக்குடி
ஆட்சியர்
K. நந்த குமார் இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


பரப்பளவு 4243 ச.கி.மீ
மக்கள் தொகை
17,51,548
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 11
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 7
ஊராட்சிகள் 443
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 400

இராமநாதபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.

வருவாய்கோட்டங்கள்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

நகராட்சிகள்[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

ஊராட்சி ஒன்றியம் -- [1][2] (ஊராட்சி)

 1. இராமநாதபுரம் - (25)
 2. பரமக்குடி - (39)
 3. கடலாடி - (60)
 4. கமுதி - (53)
 5. முதுகுளத்தூர் - (46)
 6. திருவாடானை - (47)
 7. போகலூர் - (26)
 8. மண்டபம் - (28)
 9. நயினார்கோவில் - (37)
 10. திருப்புல்லாணி - (33)
 11. இராஜசிங்கமங்கலம் - (35)

பேரூராட்சிகள்[தொகு]

தீவுகள்[தொகு]

மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:

 • பாம்பன் தீவு
 • அப்பா தீவு
 • குருசடை தீவு
 • முயல் தீவு
 • முளித் தீவு
 • தலையாரித் தீவு

இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
பரமக்குடி (தனி) டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் அதிமுக
திருவாடாணை சுப.தங்கவேல் திமுக
ராமநாதபுரம் பேராசிரியர் ஜவாஹிருல்லா ம.ம.க.
முதுகுளத்தூர் மு. முருகன் அதிமுக

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"http://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_மாவட்டம்&oldid=1802901" இருந்து மீள்விக்கப்பட்டது