கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
இராமேஸ்வரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராமேஸ்வரம் அமைந்துள்ள பாம்பன் தீவின் ஒரு பகுதி
இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
சுற்றுலாப் பயணிகள் வருகை [தொகு]
ராமேஸ்வரம் தீவை தமிழ் நாட்டுடன் இணைக்கும் ரயில் பாலம்
இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள் , பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,968 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராமேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராமேஸ்வரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இவற்றையும் பார்க்க [தொகு]
இராமநாதசுவாமி கோயில்
வெளி இணைப்புகள் [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
இராமநாதபுரம் மாவட்டம் |
|
| மாவட்ட தலைமையகம் |
|
|
| வருவாய்கோட்டங்கள் |
|
|
| வருவாய் வட்டங்கள் |
|
|
| நகராட்சிகள் |
|
|
| ஊராட்சி ஒன்றியங்கள் |
|
|
| பேரூராட்சிகள் |
|
|
| இணையதளம் |
|
|
| சுற்றுலா தலங்கள் |
|
|