உத்தரகோசமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உத்தரகோசமங்கை
—  கிராமம்  —
உத்தரகோசமங்கை கோயில் நுழைவாயில்
உத்தரகோசமங்கை
இருப்பிடம்: உத்தரகோசமங்கை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°19′04″N 78°44′11″E / 9.3178044°N 78.7364388°E / 9.3178044; 78.7364388ஆள்கூறுகள்: 9°19′04″N 78°44′11″E / 9.3178044°N 78.7364388°E / 9.3178044; 78.7364388
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு K. நந்த குமார் இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்.[4] இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.[5]

இவ்வூர்ப் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

இக் கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

இவ்வூர்ச் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.

மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, இவ்வூரை அடையலாம்.

அமைவிடம்[தொகு]

விக்கிமேப்பியா இணையதள வரைபடம்

சிறப்பு[தொகு]

ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும்.மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. (நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்).

வாயில் கல்பந்துடன் யாளி


அடிக்குறிப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரகோசமங்கை&oldid=1728000" இருந்து மீள்விக்கப்பட்டது