ஏலகிரி மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏலகிரி மலை | |
| — நகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,048 மீட்டர்கள்s (3 அடி) |
ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ளது[3]. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீ உயரத்தில் உள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்[4].
பொருளடக்கம் |
கண்ணோட்டம் [தொகு]
ஏலகிரி மலை, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலாத் தலமாக இல்லாவிடினும், சாகச விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் மற்றும் மலையேற்றம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன[5]. ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும் உள்ளன.
ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி [தொகு]
ஏலகிரி மலைக்கு வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு. அருகில் 19 கி.மீ தொலைவில் சோலையார் பேட்டை ரயில் நிலையம் உள்ளது.
சுற்றிப்பார்க்க [தொகு]
- ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
- சுவாமி மலை
- பூங்கானூர் ஏரி
- குழந்தைகள் பூங்கா
- இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமான வைணு பாப்பு வானாய்வகம் ஏலகிரி மலைக்கு அருகிலுள்ள காவலூரில் (25 கி.மீ தொலைவில்) உள்ளது.
- கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA): இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இங்கு, தங்குவதற்கு, மலையேற்றம் மற்றும் பிற முகாம் தொடர்பானச் செயல்களுக்கு உதவுகிறார்கள்.
- கோடைகாலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "Miles to go for Yelagiri Hills as a tourist spot". The Hindu. May 25, 2008. http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm. Retrieved 07-04-2009.
- ↑ T. Pullaiah, Rao Muralidhara, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy (2002). Flora of Eastern Ghats: Hill Ranges of South East India. Daya Books. ISBN 8187498498, 9788187498490. http://books.google.co.in/books?id=pSXidQZupHYC.
- ↑ "Yelagiri hills, for paragliding". The Hindu. August 20, 2008. http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm. Retrieved 07-04-2009.