உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைகள்.
- குந்தா வட்டம்
- உதகமண்டலம் வட்டம் (பகுதி)
கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள்
சோலூர் (பேரூராட்சி) மற்றும் உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் தாலுக்கா (பகுதி) கேத்தி (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | பி. கே. லிங்க கவுடர் | காங்கிரசு | 22595 | 56.56 | கே. போஜன் | சுயேச்சை | 14796 | 37.04 |
| 1962 | டி. கரிச்சான் | காங்கிரசு | 32860 | 49.57 | கே. போஜன் | சுதந்திரா கட்சி | 26278 | 39.64 |
| 1967 | கே. போஜன் | சுதந்திரா கட்சி | 37525 | 68.03 | டி. கே. கவுடர் | காங்கிரசு | 17636 | 31.97 |
| 1971 | எம். தேவராசன் | திமுக | 28901 | 56.32 | எம். பி. நஞ்சன் | சுதந்திரா கட்சி | 17662 | 34.42 |
| 1977 | ஜி. கோபாலன் | அதிமுக | 18134 | 28.94 | கே. கருப்பசாமி | திமுக | 18005 | 28.74 |
| 1980 | கே. கல்லான் | காங்கிரசு | 35528 | 51.82 | பி. கோபாலன் | அதிமுக | 25628 | 37.38 |
| 1984 | கே. கல்லான் | காங்கிரசு | 52145 | 62.99 | எசு. எ. மகாலிங்கம் | திமுக | 29345 | 35.45 |
| 1989 | எச். எம். இராசு | காங்கிரசு | 35541 | 36.76 | டி. குண்டன் என்கிற குண்ட கவுடர் | திமுக | 34735 | 35.93 |
| 1991 | எச். எம். இராசு | காங்கிரசு | 53389 | 60.79 | எச். நடராசு | திமுக | 27502 | 31.31 |
| 1996 | டி. குண்டன் | திமுக | 69636 | 70.25 | எச். எம். இராசு | காங்கிரசு | 22456 | 22.65 |
| 2001 | எச். எம். இராசு | காங்கிரசு | 59872 | 62.67 | ஜெ. கட்சி கவுடர் | பாஜக | 30782 | 32.22 |
| 2006 | பி. கோபாலன் | காங்கிரசு | 45551 | --- | கே. என். துரை | அதிமுக | 40992 | --- |
| 2011 | புத்திசந்திரன் | அதிமுக | 61504 | -- | கணேசன் | காங்கிரசு | 53819 | -- |
- 1977ல் ஜனதாவின் எ. மணியன் 16946 (27.05%) & காங்கிரசின் எம். பி. இராமன் 9567 (15.27%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் ஜனதாவின் என். சிக்கையா 7184 (10.48%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் என். கங்காதரன் 19281 (19.94%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் ஜெ. பெஞ்சமின் ஜேக்கப் 4963 வாக்குகள் பெற்றார்.