திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 33. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]

 • செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,

திருப்போரூர் (பேரூராட்சி),

 • திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)

நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,

திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி).[1]

 • 1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்த தொகுதி காணாமல் போனது.அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [2]
1967 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [3]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [4]
1977 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [5]
1980 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1984 தமிழ்மணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1989 டாக்டர் திருமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1991 தனபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [9]
1996 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [10]
2001 கனிதா சம்பத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [11]
2006 மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி [12]

ஆதாரங்கள்[தொகு]

 1. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
 2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
 3. 1967 இந்திய தேர்தல் ஆணையம்
 4. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
 5. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
 6. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
 7. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
 8. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
 9. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
 10. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
 11. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
 12. 2006 இந்திய தேர்தல் ஆணையம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]