போளூர் (சட்டமன்றத் தொகுதி)
போளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 66. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. திருப்பத்தூர், செங்கம், கலசப்பாக்கம், அணைக்கட்டு, ஆரணி, பெரணமல்லூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] தொகுதி எல்லைகள்
- வந்தவாசி வட்டம் (பகுதி)
மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.
- போளூர் வட்டம் (பகுதி)
துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம, அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிக்குப்பம், விளாங்க்குப்பம், கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தால், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குஸத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமனி கிராமங்கள்.
களம்பூர் (பேரூராட்சி), போளுர் (பேருராட்சி) மற்றும் சேத்பட்டு (பேரூராட்சி).[1]
[தொகு] வெற்றி பெற்றவர்கள்
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | மாணிக்கவேல் நாயக்கர் | பொது நல கட்சி | 19508 | 54.65 | அண்ணாமலை செட்டி | காங்கிரசு | 16190 | 45.35 |
| 1957 | எசு. எம். அண்ணாமலை | சுயேச்சை | 17222 | 42.96 | டி. பி. கேசவ ரெட்டியார் | சுயேச்சை | 10616 | 26.48 |
| 1962 | கேசவ ரெட்டியார் | திமுக | 29283 | 62.16 | பெரியசாமி | காங்கிரசு | 17828 | 37.84 |
| 1967 | எசு. குப்பம்மாள் | திமுக | 33292 | 56.92 | எசு. எம். அண்ணாமலை | காங்கிரசு | 20224 | 34.58 |
| 1971 | டி. பி. சீனிவாசன் | திமுக | 34728 | 57.92 | டி. ஆர். நடேச கவுண்டர் | ஸ்தாபன காங்கிரசு | 25232 | 42.08 |
| 1977 | கே. ஜே. சுப்பிரமணியன் | அதிமுக | 24631 | 37.82 | எசு. முருகையன் | திமுக | 21902 | 33.63 |
| 1980 | எல். பலராமன் | காங்கிரசு | 35456 | 48.92 | எ. செல்வன் | அதிமுக | 33303 | 45.95 |
| 1984 | ஜெ. இராசாபாபு | காங்கிரசு | 52437 | 62.40 | டி. கே. சுப்பிரமணியன் | திமுக | 30319 | 36.08 |
| 1989 | எ. இராசேந்திரன் | திமுக | 31478 | 38.80 | எசு. கண்ணன் | அதிமுக (ஜெ) | 21334 | 26.29 |
| 1991 | டி. வேதியப்பன் | அதிமுக | 60262 | 62.13 | எ. இராசேந்திரன் | திமுக | 21637 | 22.31 |
| 1996 | எ. இராசேந்திரன் | திமுக | 59070 | 55.45 | அக்ரி. எசு. கிருசுணமூர்த்தி | அதிமுக | 34917 | 32.78 |
| 2001 | நளினி மனோகரன் | அதிமுக | 59678 | 51.31 | சி. ஏழுமலை | திமுக | 48871 | 42.02 |
| 2006 | பி. எசு. விஜயகுமார் | காங்கிரசு | 58595 | --- | டி. வேதியப்பன் | அதிமுக | 51051 | --- |
- 1977ல் ஜனதாவின் டி. எம். சுப்ரமணியன் 11279 (17.32%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் ஜெ. இராசாபாபு 15453 (19.05%) & அதிமுக ஜானகி அணியின் எ. செல்வன் 12096 (14.91%) வாக்குகள் பெற்றனர்.
- 1991ல் பாமகவின் கே. ஜி. ஏழுமலை 13026 (13.43%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எசு. சி. புருசோத்தமன் 6867 வாக்குகள் பெற்றார்.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு