குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்னூர் நீலகிரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைகள்.
- கோத்தகிரி வட்டம்
- குன்னார் வட்டம் (பகுதி)
எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள்,
அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரசு | 22113 | 44.56 | எச். பி. அரி கவுடர் | சுயேச்சை | 16845 | 33.94 |
| 1962 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரசு | 36668 | 51.65 | ஜெ. பெல்லி | திமுக | 15103 | 21.27 |
| 1967 | பி. கவுடர் | திமுக | 31855 | 58.74 | எம். கே. என். கவுடர் | காங்கிரசு | 22380 | 41.26 |
| 1971 | ஜெ. கருணைநாதன் | திமுக | 33451 | 60.84 | என். ஆண்டி | ஸ்தாபன காங்கிரசு | 15325 | 27.87 |
| 1977 | கே. அரங்கசாமி | திமுக | 22649 | 42.33 | சி. பெரியசாமி | அதிமுக | 13150 | 24.58 |
| 1980 | எம். அரங்கநாதன் | திமுக | 34424 | 56.85 | சி. பெரியசாமி | அதிமுக | 22756 | 37.58 |
| 1984 | எம். சிவக்குமார் | அதிமுக | 47113 | 56.70 | எம். அரங்கநாதன் | திமுக | 34990 | 42.11 |
| 1989 | என். தங்கவேல் | திமுக | 40974 | 42.38 | பி. ஆறுமுகம் | காங்கிரசு | 29814 | 30.84 |
| 1991 | எம். கருப்புசாமி | அதிமுக | 53608 | 59.40 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 31457 | 34.86 |
| 1996 | என். தங்கவேல் | திமுக | 63919 | 64.27 | எசு. கருப்புசாமி | அதிமுக | 28404 | 28.56 |
| 2001 | கே. கந்தசாமி | தமாகா | 53156 | 55.86 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 36512 | 38.37 |
| 2006 | எ. சவுந்தரபாண்டியன் | திமுக | 45303 | --- | எம். செல்வராசு | அதிமுக | 39589 | --- |
| 2011 | கா.ராமச்சந்திரன்் | திமுக | 61302 | --- | தெள்ளி | இகம்யூ | 52010 | --- |
- 1962ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எச். பி. தேவராசு 11679 (16.45%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் காங்கிரசின் சந்திரன் 8829 (16.50%) & ஜனதாவின் கிரிசய்யா 7888 (14.74%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எசு. மணிமாறன் 14648 (15.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. பொன்னுராசு 10672 (11.04%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006ல் தேமுதிகவின் வி. சிதம்பரம் 7227 வாக்குகள் பெற்றார்.