எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடப்பாடி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும். 1951ம் ஆண்டிலிருந்து இது சட்டமன்ற தொகுதியாக உள்ளது. 1957 & 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை.
தொகுதி எல்லைகள் [தொகு]
- எடப்பாடி தாலுக்கா
- மேட்டூர் தாலுக்கா (பகுதி)
வீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கிராமங்கள்,
நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஆவடத்தூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஜலகண்டாபுரம் (பேரூராட்சி)
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் | காங்கிரசு | 15368 | 33.15 | எஸ். மாரிமுத்து கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 11280 | 24.33 |
| 1967 | எ. ஆறுமுகம் | திமுக | 36935 | 54.70 | கே. எஸ். எஸ். கவுண்டர் | காங்கிரசு | 30593 | 45.30 |
| 1971 | எ. ஆறுமுகம் | திமுக | 35638 | 54.72 | டி. நடராஜன் | காங்கிரசு (ஸ்தாபன) | 29485 | 45.28 |
| 1977 | ஐ. கணேசன் | அதிமுக | 31063 | 38.56 | டி. நடராஜன் | காங்கிரசு | 24256 | 30.11 |
| 1980 | ஐ. கணேசன் | அதிமுக | 37978 | 38.93 | டி. நடராஜன் | சுயேச்சை | 32159 | 32.97 |
| 1984 | கோவிந்தசாமி | காங்கிரசு | 68583 | 64.78 | பி. ஆறுமுகம் | திமுக | 27860 | 26.32 |
| 1989 * | கே. பழனிசாமி | அதிமுக (ஜெ) | 30765 | 33.08 | எல். பழனிசாமி | திமுக | 29401 | 31.62 |
| 1991 | கே. பழனிசாமி. | அதிமுக | 72379 | 58.24 | பி. கொழந்தா கவுண்டர் | பாமக | 31113 | 25.03 |
| 1996 | ஐ. கணேசன் | பாமக | 49465 | 37.68 | பி. எ. முருகேசன் | திமுக | 40273 | 30.68 |
| 2001 | ஐ. கணேசன் | பாமக | 74375 | 55.40 | எ. கந்தசாமி | திமுக | 43564 | 32.45 |
| 2006 ** | வி. காவேரி | பாமக | 76027 | -- | கே. பழனிசாமி | அதிமுக | 69680 | -- |
| 2011 | கே. பழனிசாமி. | அதிமுக | 1014586 | -- | மு.கார்த்திக்் | பாமக | 69848 | -- |
- 1977ல் ஜனதாவின் பி. ஜெயதேவன் 13544 (16.81%) & திமுகவின் எ. ஆறுமுகம் 11695 (14.52%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் காங்கிரசு சார்பில் நின்ற கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர் 17884 (18.33%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கோவிந்தசாமி 16289 (17.52%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஐ. கணேசன் 15181 (16.32%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் திமுகவின் எ. கந்தசாமி 20011 (16.10) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அதிமுகவின் கே. பழனிசாமி 37036 (28.21%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சையான பி. கொழந்தா கவுண்டர் 8576 (6.39%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எ. கே. இராஜேந்திரன் 7954 வாக்குகள் பெற்றார்.