ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கூர், ஆற்காடு, கட்பாடி, நட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]

  • வாலாஜா வட்டம் (பகுதி)

படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.

அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 காதர் செரிப் காங்கிரசு 17934 38.65 முனுசாமி கவுண்டர் காமன் வீல் கட்சி 10983 23.67
1957 சந்திரசேகர நாயக்கர் காங்கிரசு 12386 33.63 ஆர். எ. சுபன் சுயேச்சை 10759 29.22
1962 அப்துல் கலீல் திமுக 24082 39.32 சந்திரசேகர நாயக்கர் காங்கிரசு 23218 37.91
1967 எ. ஜி. சாகிப் சுயேச்சை 30011 45.14 எசு. கே. செரிப் காங்கிரசு 28953 43.55
1971 கே. எ. வகாப் சுயேச்சை 36357 53.96 எ. ஜி. அரங்கநாத நாய்க்கர் நிறுவன காங்கிரசு 31022 46.04
1977 துரைமுருகன் திமுக 31940 43.53 கே. எ. வகாப் சுயேச்சை 16643 22.68
1980 துரைமுருகன் திமுக 44318 53.70 என். ரேணு அதிமுக 37064 44.91
1984 எம். கதிர்வேலு காங்கிரசு 56068 55.60 அப்முல் ஜாபார் திமுக 33337 33.06
1989 ஜெ. கஸ்சய்ன் சுயேச்சை 27724 30.08 எம். குப்புசாமி திமுக 23784 25.80
1991 என். ஜி. வேணுகோபால் அதிமுக 65204 53.29 எம். அப்துல் லத்தீப் திமுக 32332 26.42
1996 ஆர். காந்தி திமுக 71346 50.80 எம். மாசிலாமணி அதிமுக 37219 26.50
2001 எம். எசு. சந்திரசேகரன் அதிமுக 83250 56.37 ஆர். காந்தி திமுக 58287 39.47
2006 ஆர். காந்தி திமுக 92584 --- ஆர். தமிழரசன் அதிமுக 60489 ---
  • 1962ல் நாம் தமிழர் கட்சியின் வரதராசன் 9562 (15.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் காங்கிரசின் சம்பத் நரசிம்மன் 14838 (20.22%) & ஜனதாவின் அப்துல் காபர் 7584 (10.34%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் கோவி மோகனன் 15738 (17.07%), காங்கிரசின் எம். கதிர்வேல் 10813 (11.73%) & சுயேச்சை வில்வநாதன் 10088 (10.94%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் அனந்தலை நடேசன் 23064 (18.85%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பாமகவின் கே. எல். இளங்கோவன் 21987 (15.66%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.