திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 10. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
[தொகு] தொகுதியில் அடங்கிய பகுதிகள்
- அம்பத்தூர் வட்டம்
கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி
[தொகு] வெற்றி பெற்றவர்கள்
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | எ. பி. அரசு | திமுக | 51437 | 61.23 | வி. வெங்கடேசுவரலு | காங்கிரசு | 32564 | 38.77 |
| 1971 | எம். வி. நாராயணசாமி | திமுக | 51487 | 53.74 | வெங்கடேசுவரலு நாயுடு | நிறுவன காங்கிரசு | 35391 | 36.94 |
| 1977 | பி. சிகாமணி | அதிமுக | 26458 | 31.29 | எம். வி. நாராயணசாமி | திமுக | 23995 | 28.37 |
| 1980 | குமரி ஆனந்தன் | காந்தி காமராசு தேசிய காங்கிரசு | 48451 | 47.36 | டி. லோகநாதன் | காங்கிரசு | 44993 | 43.98 |
| 1984 | ஜி. கே. ஜெ. பாரதி | காங்கிரசு | 65194 | 54.26 | டி. கே. பழனிசாமி | திமுக | 53684 | 44.68 |
| 1989 | டி. கே. பழனிசாமி | திமுக | 67849 | 45.53 | ஜெ. இராமச்சந்திரன் | அதிமுக (ஜெ) | 46777 | 31.42 |
| 1991 | கே. குப்பன் | அதிமுக | 85823 | 56.54 | டி. கே. பழனிசாமி | திமுக | 58501 | 38.54 |
| 1996 | டி. சி. விசயன் | திமுக | 115939 | 64.19 | பி. பால்ராசு | அதிமுக | 40917 | 22.65 |
| 2001 | டி. ஆறுமுகம் | அதிமுக | 113808 | 54.94 | குமரி அனந்தன் | சுயேச்சை | 79767 | 38.50 |
| 2006 | கே. பி. பி. சாமி | திமுக | 158204 | --- | வி. மூர்த்தி | அதிமுக | 154757 | --- |
- 1977ல் ஜனதாவின் முத்துசாமி நாயுடு 16800 (19.87%) & காங்கிரசின் மாதவன் 16888 (19.97%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் ஜி. கே. ஜெ. பாரதி 19782 (13.29%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் முருகன் 21915 வாக்குகள் பெற்றார்.