மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)
மொடக்குறிச்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- ஈரோடு வட்டம் (பகுதி) {ஊராட்சிகள்}
புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் கிராமங்கள்.
{பேரூராட்சிகள்} அவல்ப்பூந்துறை, மொடக்குறிச்சி , பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு , சிவகிரி , கொள்ளங்கோயில், ஊஞ்சலூர் , வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம்.
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | கே. ஆர். நல்லசிவம் | சங்கத சோசலிச கட்சி | 45303 | 61.23 | சி. குழந்தையம்மாள் | காங்கிரசு | 25444 | 34.39 |
| 1971 | மு. சின்னசாமி | திமுக | 45108 | 58.18 | எம். சென்னியப்பன் | சம்யுக்தா சோசலிச கட்சி | 31431 | 40.54 |
| 1977 | சுசுப்புலட்சுமி ஜெகதீசன் | அதிமுக | 38072 | 44.75 | அ. கணேசமூர்த்தி | திமுக | 15200 | 17.86 |
| 1980 | எசு. பாலகிருஷ்ணன் | அதிமுக | 56049 | 58.67 | அ. கணேசமூர்த்தி | திமுக | 38402 | 40.20 |
| 1984 | எசு. பாலகிருஷ்ணன் | அதிமுக | 65641 | 56.56 | அ. கணேசமூர்த்தி | திமுக | 48315 | 41.63 |
| 1989 | அ. கணேசமூர்த்தி | திமுக | 58058 | 44.27 | எசு. பாலகிருஷ்ணன் | அதிமுக (ஜெ) | 42051 | 32.06 |
| 1991 | கவிநிலவு தர்மராசு | அதிமுக | 78653 | 61.98 | கு. இளஞ்செழியன் | திமுக | 42178 | 33.24 |
| 1996 | சுப்புலட்சுமி ஜெகதீசன் | திமுக | 64436 | 54.97 | ஆர். என். கிட்டுசாமி | அதிமுக | 24896 | 21.24 |
| 2001 | பி. சி. இராமசாமி | அதிமுக | 74296 | 55.24 | சுப்புலட்சுமி ஜெகதீசன் | திமுக | 40084 | 29.81 |
| 2006 | ஆர். எம். பழனிசாமி | காங்கிரசு | 64625 | --- | வி. பி. நமசிவாயம் | அதிமுக | 60765 | --- |
- 1977ல் ஜனதாவின் எம். ஆறுமுகம் 12955 (15.23%) & காங்கிரசின் ஆர். சாய்நாதன் 11462 (13.47%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் சின்னசாமி 16811 (12.82%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் கு. இளஞ்செழியன் 20403 (17.41%) வாக்குகள் பெற்றார். 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
- 2006ல் தேமுதிகவின் பி. விக்டோரியா 10711 வாக்குகள் பெற்றார்.