பல்லடம் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லடம் திருப்பூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- திருப்பூர் வட்டம் (பகுதி)
முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்),
- பல்லடம் தாலுக்கா (பகுதி) பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி,கஸ்பா, அய்யம்பாளையம், கரடிபாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | பி. எசு. சின்னதுரை | பிரஜா சோசலிச கட்சி | 27111 | 57.83 | குமாரசாமி கவுண்டர் | காங்கிரசு | 17515 | 37.36 |
| 1962 | செங்காளியப்பன் | காங்கிரசு | 33437 | 51.66 | பி. எசு. சின்னதுரை | பிரஜா சோசலிச கட்சி | 14736 | 22.77 |
| 1967 | கே. என். கே. கவுண்டர் | பிரஜா சோசலிச கட்சி | 31977 | 46.99 | செங்காளியப்பன் | காங்கிரசு | 24421 | 35.89 |
| 1971 | கே. என். குமாரசாமி | பிரஜா சோசலிச கட்சி | 34876 | 57.57 | செங்காளியப்பன் | ஸ்தாபன காங்கிரசு | 21070 | 34.78 |
| 1977 | பி. ஜி. கிட்டு | அதிமுக | 27172 | 33.11 | கே. என். குமாரசாமி | காங்கிரசு | 20175 | 24.58 |
| 1980 | பரமசிவ கவுண்டர் | அதிமுக | 40305 | 48.36 | கே. என். குமாரசாமி | காங்கிரசு | 32345 | 38.81 |
| 1984 | பரமசிவ கவுண்டர் | அதிமுக | 51083 | 53.97 | சிவசாமி | சுயேச்சை | 40510 | 42.80 |
| 1989 | மு. கண்ணப்பன் | திமுக | 45395 | 39.12 | கே. சிவராசு | அதிமுக (ஜெ) | 31819 | 27.42 |
| 1991 | கே. எசு. துரைமுருகன் | அதிமுக | 69803 | 61.03 | மு. கண்ணப்பன் | திமுக | 37079 | 32.42 |
| 1996 | எசு. எசு. பொன்முடி | திமுக | 73901 | 55.64 | கே. எசு. துரைமுருகன் | அதிமுக | 41361 | 31.14 |
| 2001 | எசு. எம். வேலுசாமி | அதிமுக | 82592 | 55.86 | எசு. எசு. பொன்முடி | திமுக | 50118 | 33.89 |
| 2006 | எசு. எம். வேலுசாமி | அதிமுக | 73059 | --- | எசு. எசு. பொன்முடி | திமுக | 67542 | --- |
- 1967ல் சுயேச்சை எம். வி. கவுண்டர் 11650 (17.12%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதாவின் ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர் 19379 (23.61%) & திமுகவின் ஆர். சி. கந்தசாமி 14658 (17.86%)வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் சிவாஜி கந்தசாமி 24980 (21.53%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் பழனிசாமி 11707 (8.81%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் ஜி. சுப்ரமணியம் 19697 வாக்குகள் பெற்றார்.