வன்னியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
? இந்தக் கட்டுரை அல்லது பகுதி சொந்த ஆய்வுக் கருத்துக்களை அல்லது ஆதாரம் தரப்படாத கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். மேலதிக விபரங்களுக்கு இதன் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.

வன்னியர் எனப்படுவோர் வடக்கு தமிழ்நாடு, தெற்கு கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் வாழும் ஒரு சாதியினரைக் குறிக்கும்.

பொருளடக்கம்

[தொகு] தோற்றம்:

வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.

[தொகு] வரலாற்று நோக்கில் வன்னியர்:

படையாச்சி,பள்ளி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,கச்சிராயர்கள்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர். வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. ஆதாரம் இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது. வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.(prosopis spicigera)

[தொகு] மக்கள் தொகை

தமிழகத்தில் வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய சமுதாயம் இவர்களே [1]

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] ஆதாரம்

  1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன் தமிழ்கூடல் டட்ஸ் தமிழ் நக்கீரன்

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=வன்னியர்&oldid=1102906" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்