பிக்கட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிக்கட்டி, (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது.

அமைவிடம்[தொகு]

பிக்கட்டி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1797 வீடுகளும், 5864 மக்கள்தொகையும் கொண்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிக்கட்டி பேரூராட்சியின் இணையதளம்
  2. பிக்கட்டி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கட்டி&oldid=2726898" இலிருந்து மீள்விக்கப்பட்டது