குன்னூர்
| குன்னூர் | |
| — தேர்வு நிலை நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | அர்ச்சனா பட்நாயக் [3] |
| நகராட்சி தலைவர் | கோபாலகிருஷ்ணன் |
| சட்டமன்றத் தொகுதி | குன்னூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
கா. ராமச்சந்திரன் (திமுக) |
| மக்கள் தொகை | 50,079 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,502 மீட்டர்கள்s (4 அடி) |
குன்னூர் (ஆங்கிலம்:Coonoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நீலகிரி மலையில் உதகைக்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இங்கு ஒரு பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் உள்ளன. நீலகிரி மலை இரயில் பாதையில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1502 மீட்டர் (4927 அடி) உயரத்தில் இருக்கின்றது.
சங்ககாலத்தில் இவ்வூர் [தொகு]
இதன் ஊரின் சரியான தமிழ்ப்பெயர் குன்றூர். சங்ககாலத்தில் வேளிர் குடியினர் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் உழவர்கள். இந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். இவர்கள் தொன்முது வேளிர் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ( பரணர், நற்றிணை 280)
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50,079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். குன்னூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குன்னூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Coonoor". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.