ஆற்காடு வீராசாமி
| ஆற்காடு நா. வீராசாமி | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
|---|---|
| கட்சி பொறுப்பு | முதன்மை செயலாளர் |
|
|
|
| பிறப்பு | ஏப்ரல் 21, 1937 குப்பாடிச்சத்தம், வேலூர் மாவட்டம் |
| இருப்பிடம் | சென்னை |
ஆற்காடு நா. வீராசாமி, (ஆங்கிலம் Arcot N. Veeraswami) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
வேலூர் மாவட்டம் குப்பாடிச்சத்தத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். 1967, 1971இல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1996, 2001 மற்றும் 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1977 - 1983 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். முன்னர் தி. மு. க. வின் பொருளாளராக பணியாற்றி தற்போது திமுகவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை [1][2]