ஜி. கே. மூப்பனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூப்பனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜி. கே. மூப்பனார்

அரசியல் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்

பிறப்பு 19-8-1930
கபிஸ்தலம், தமிழ்நாடு
இறப்பு 30-8-2001
சென்னை
வாழ்க்கைத்
துணை
கஸ்தூரி
பிள்ளைகள் 1 மகன் ஜி.கே.வாசன் , 1 மகள்உஷாராணி
இருப்பிடம் சென்னை
ஆகஸ்ட் 30 இன் படியான தகவல், 2001
மூலம்: [1]

ஜி. கே. மூப்பனார் (ஆகஸ்ட் 19, 1931 - ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் காங்கிரசு தலைவர். இவர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் 6 பெர் - சகோதரர்கள்: ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி.

தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.

ஜி. கே. மூப்பனார் நினைவிடம்

இவரது மகன் ஜி.கே.வாசன்.தற்போதைய நடுவண் அரசின் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்

வகித்த பதவிகள்[தொகு]

  • புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
  • தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை 1956-1972
  • ,, திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை 1980-2001
  • ,, தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 1965-1975
  • ,, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1976-1980
  • பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1980-1988
  • தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1988-1989
  • தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் 1989-1990
  • ராஜ்யசபா உறுப்பினர் 1977-1989
  • தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் 1996-2001
  • ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

ஈடுபாடு[தொகு]

  • இசை
  • அரசியல்
  • பொதுத் தொண்டு

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கே._மூப்பனார்&oldid=1722372" இருந்து மீள்விக்கப்பட்டது